பெற்றோரை பார்த்துக் கொள்வது பிள்ளைகளின் கடமை. பெண் பிள்ளைகள் மட்டும் உள்ள பெற்றோரை என்ன செய்வது? அதுவும் பிள்ளைகள் வெளி நாட்டில் இருந்தால்? கடவுள் அருளாலும் என் கணவரின் நல்ல எண்ணத்தாலும் என் தந்தை என்னுடன் வெளி நாட்டில் வசித்து வருகிறார். முதலில் இங்கு இருப்பதற்கு விருப்பபட்டு வந்த அவருக்கு, இரண்டு வருடங்களில் வெளிநாட்டு வாழ்க்கை வெறுத்து விட்டது. வெளியில் செல்வதற்கும், கோவிலுக்கு செல்வதற்கும் பெண்ணையும் மருமகனையும் எதிர்பார்த்து காத்துக்கொண்டு அமர்ந்து இருப்பது கஷ்டமாக இருக்கிறது. புத்தகம் படிப்பது, வேறு எதாவது கம்முனிட்டி சென்ட் சென்று எதாவது வகுப்பு செல்லவும் அவருக்கு விருப்பம் இல்லை.
வேறு ஏதாவது நல்ல வழி இருக்கிறதா என்று கண்டு பிடிக்க வேண்டும் :)
வேறு ஏதாவது நல்ல வழி இருக்கிறதா என்று கண்டு பிடிக்க வேண்டும் :)
No comments:
Post a Comment